பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை சினிமா செய்திகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மீண்டும் ஐதராபாத் பறந்த 'அண்ணாத்த'சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கொரோனா பிரச்னை, ரஜினியின் உடல்நிலை பாதிப்பு போன்றவற்றால், இதன் படப்பிடிப்பு அவ்வப்போது தடைப்பட்டது. சமீபத்தில், சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இப்போது, அதை முடித்துவிட்டு அடுத்தப்படியாக,
 மதுரை சினிமா செய்திகள்

மீண்டும் ஐதராபாத் பறந்த 'அண்ணாத்த'சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கொரோனா பிரச்னை, ரஜினியின் உடல்நிலை பாதிப்பு போன்றவற்றால், இதன் படப்பிடிப்பு அவ்வப்போது தடைப்பட்டது. சமீபத்தில், சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இப்போது, அதை முடித்துவிட்டு அடுத்தப்படியாக, ஐதராபாதில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக, தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 'கர்ணன்' ரிலீஸில் மாற்றமில்லைமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், லால் நடிப்பில் உருவாகி உள்ள, கர்ணன் படம் இன்று வெளியாகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல் தியேட்டர்களில், 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், இப்படம் வெளியாகுமா என, கடைசி நேரத்தில் சந்தேகம் எழுந்தது. தயாரிப்பாளர் தாணு டுவிட்டரில், ''சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் திரைக்கு வரும். அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும். கர்ணன் படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு கேட்கிறேன்,'' என பதிவிட்டுள்ளார். நடிகை நக்மாவுக்கு கொரோனாபழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத்; இயக்குனர் ராஜமவுலியின் தந்தை. பாகுபலி, தலைவி உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதி உள்ளார். இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதோடு, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்படி கேட்டுள்ளார். நடிகை நக்மாவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். 'மாயவன் - 2' தயாராகிறதுமாயவன் படத்தில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராக களமிறங்கினார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். அடுத்தடுத்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லரை தேடி கண்டுபிடிக்கும் இளம் போலீஸ் அதிகாரியின் கதை. தற்போது, இதன், இரண்டாம் பாகம் தயாராகிறது. சி.வி.குமாரே தயாரித்து, இயக்குகிறார். ''மாயவனை மீண்டும் உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாயவன் ரீலோடட் என்ற பெயரில் தயாராகிறது. ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவும், பாராட்டுமே இதற்கு காரணம். படம் பற்றிய முழு விபரம் ஏப்ரல், 14ல் வெளியிடப்படும்,'' என சி.வி.குமார் தெரிவித்துள்ளார். 'அந்தகனில்' இணைந்த சமுத்திரகனிஹிந்தியில், தேசிய விருது பெற்ற அந்தாதூன் படம், தென்னிந்திய மொழிகளில் தற்போது ரீமேக்காகி வருகிறது. தெலுங்கில் நிதின், மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்க, தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் உருவாகிறது. இவரின் தந்தை தியாகராஜனே இயக்கி, தயாரிக்கிறார். ஹிந்தியில், தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். பிரியா ஆனந்த், கார்த்திக் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இப்போது இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிகர் சமுத்திரகனியும் இணைந்துள்ளார். ரஹ்மான் அறிவித்த போட்டிஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரித்து, இசைஅமைத்துள்ள படம் 99 சாங்ஸ். எஹான் பட், எடில்ஸி நடிக்க, விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். இப்படம் தொடர்பாக போட்டி ஒன்றை ரஹ்மான் அறிவித்து உள்ளார். அதன்படி, 99 சாங்ஸ் பட பாடல்களில் தங்களுக்கு பிடித்த ஒரு பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் பாடி, அதை யு - டியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். அதை ரஹ்மானுக்கும் (@arrahman) டேக் செய்ய வேண்டும். 10 வெற்றியாளர்கள் ரஹ்மானையும், 99 சாங்ஸ் குழுவையும் காணொலி வாயிலாக சந்தித்து உரையாடலாம். ஒரு வெற்றியாளருக்கு ரஹ்மானோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X