கால்வாயில் கழிவு நீர் கலப்பு மாசடையும் நாராயணபுரம் ஏரி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பள்ளிக்கரணை- கீழ்கட்டளை சுற்று வட்டாரப் பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக, மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நடுவே, ரேடியல் சாலை அமைக்கப்பட்டதால், இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஏரியின் ஒரு பக்க கரையை உடைத்த சமூக விரோத கும்பல், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஏரிக் கரையோரம் இருந்த

பள்ளிக்கரணை- கீழ்கட்டளை சுற்று வட்டாரப் பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக, மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நடுவே, ரேடியல் சாலை அமைக்கப்பட்டதால், இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஏரியின் ஒரு பக்க கரையை உடைத்த சமூக விரோத கும்பல், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஏரிக் கரையோரம் இருந்த சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கீழ்கட்டளை ஏரியின் உபரிநீர், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் கலப்பதற்காக, மூன்று கிலோ மீட்டர் துாரத்திற்கு போக்கு கால்வாய் உள்ளது. அது, கடந்த மழைக் காலத்தில், தற்காலிகமாக பராமரிக்கப்பட்டது.தற்போது, போக்குகால்வாயில் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால், கால்வாய் முழுவதும் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. போக்கு கால்வாய் கழிவு நீர், நாராயணபுரம் ஏரியில் கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், போக்குகால்வாயில் கழிவு நீர் விடுவதை தடுக்க வேண்டும். அதிலிருக்கும் கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்தி, முழுமையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X