மடிப்பாக்கம்- மடிப்பாக்கம், மின்வாரிய அலுவலகத்தில் அடைப்பு காரணமாக, கழிவு நீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர் தவித்து வருகின்றனர்.சென்னை, மடிப்பாக்கம் பஸ் நிலையம் அடுத்துள்ளது மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையத்துடன் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தின் கீழ் பகுதியில் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதி நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும் கவுன்டர்கள் இயங்கி வருகின்றன.மேல் தளத்தில் உதவிப் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. கீழ்தளத்தில் அலுவலகம் ஊழியர்கள், நுகர்வோர் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் உள்ளன.சமீப காலமாக அடைப்பு காரணமாக, கழிவுநீர் வெளியே கழிவறை சுற்றுப்புற பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அங்கு குப்பைகள் கொட்டப்படுகிறது.மின்கட்டணம் செலுத்த வரிசையில் நிற்கும் நுகர்வோர் துர்நாற்றத்தால் தவித்து வருகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அலுவலக ஊழியர்கள் உடல் சுகவீனத்தால் பாதிக்கப்படு கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE