தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் சிரமம்| Dinamalar

தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் சிரமம்

Added : ஏப் 09, 2021
Share
தாம்பரம் - தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களை மிரட்டும் தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தாம்பரம் நகராட்சியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, 'புளு கிராஸ்' அமைப்பின் உதவியுடன், தெரு நாய்களுக்கு கருத்தடை

தாம்பரம் - தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களை மிரட்டும் தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தாம்பரம் நகராட்சியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, 'புளு கிராஸ்' அமைப்பின் உதவியுடன், தெரு நாய்களுக்கு கருத்தடை நடந்து வந்தது. பல்வேறு காரணங்களால், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததால், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.இது குறித்து, கடப்பேரி பசுமை பாதுகாப்பு நலச்சங்கத்தினர், நகராட்சி அதிகாரிகளிடம், ஜனவரி மாதம், அளித்த புகாரில், 'கருத்தடை நிறுத்தப்பட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகளில், அவற்றின், எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துவிட்டது.இது, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது' எனக் கூறியிருந்தனர்.பலமுறை புகார் அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்காத நிலையில், நம் நாளிதழில், பிப்., மாதம் செய்தி வெளியானது. அப்போது, கருத்தடை செய்யும் பணிகள், விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.ஆனால், இன்று வரை, அப்பணிகள் துவங்கப்படவில்லை என்றும், தெருநாய்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோடை காலம் துவங்கி விட்டதால், தெருநாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும், நாய் கடிக்கு ஆளாவோர், 'ரேபிஸ்' நோய் தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனினும், நாய்களுக்கு தொடர்ந்து கருத்தடை செய்யப்படுவதாக, நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு, உடனடி தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X