தனியார் மதில் சுவரால் விபத்து அபாயம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
-ஆதம்பாக்கம், கோ - -ஆபரேட்டிவ் நகரில், தனியார் நிறுவனம் அமைக்கும் மதில் சுவரால், விபத்து அபாயம் உள்ளதால், மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், 165வது வார்டில் அமைந்துள்ளது, கோ- - ஆபரேட்டிவ் நகர். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதி

-ஆதம்பாக்கம், கோ - -ஆபரேட்டிவ் நகரில், தனியார் நிறுவனம் அமைக்கும் மதில் சுவரால், விபத்து அபாயம் உள்ளதால், மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், 165வது வார்டில் அமைந்துள்ளது, கோ- - ஆபரேட்டிவ் நகர். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதி மக்கள், ஆதம்பாக்கம், ஆலந்துார், பரங்கிமலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்ல, கோ- - ஆபரேட்டிவ் நகர், நேரு தெரு மற்றும் பாரதிதாசன் தெரு சாலை, பிரதான வழித்தடமாக உள்ளது. மேலும், வேளச்சேரி - -மவுன்ட் சாலையின் இருபுறமும் பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர், இச்சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.எந்நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், நேரு சாலை மற்றும் பாரதிதாசன் சாலையை இணைக்கும் சந்திப்பு அபாயகரமானது. அதன் ஒரு பகுதி காலிமனையாக இருந்ததால், திருப்பத்தில் எதிரில் வரும் வாகனங்கள், கண்ணுக்கு தெரியும். ஆனாலும், ஒரு சில விபத்துகள் நடந்துள்ளன.இதை தடுப்பதற்காக, சாலையின் ஒருபுறம் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் கட்டுமான நிறுவனம் காலிமனையை வாங்கி, மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.குறிப்பிட்ட சாலை திருப்பத்தில், மிகப்பெரிய மதில் சுவர் எழுப்பி வருகிறது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் எதுவும் தெரியாமல் போகும். இந்த மதில் சுவர் மூலம் விபத்துகள் அதிகரிக்க, வாய்ப்பு அதிகம்.எனவே, திருப்பத்தில் மதில்சுவர் எழுப்பும்போது, எதிரில் வரும் வாகனங்கள் தெரியும் வகையில், 'பர்கோலா' டிசைனில் மதில் சுவர் அமைக்க வேண்டும் என, நலச்சங்கத்தினர் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால், அந்நிறுவன ஒப்பந்ததாரர்கள் அதை உதாசினப்படுத்தி, மதில்சுவர் அமைத்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், இப்பிரச்னை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நலச்சங்கத்தினர் கோரியுள்ளனர்
-- நமது நிருபர்- .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X