பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சேதம்; பயணியர் அவதி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தாம்பரம்- தாம்பரம் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள, பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்துள்ளதால், பயணியர் அவதியடைகின்றனர்.தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, தினசரி, லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்வோர், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல, ரயில் நிலையத்தை ஒட்டியே பஸ்

தாம்பரம்- தாம்பரம் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள, பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்துள்ளதால், பயணியர் அவதியடைகின்றனர்.தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, தினசரி, லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்வோர், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல, ரயில் நிலையத்தை ஒட்டியே பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது.இந்த பஸ் நிறுத்தத்தின், நிழற்குடை சேதமடைந்துள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகியும், இன்னும் சரி செய்யப்படாததால், கோடை துவங்கி உள்ள நிலையில், பயணியர் வெயிலில் நின்று அவதியடைகின்றனர்.போதிய அளவில், இருக்கைகள் வசதிகளும் இல்லாததால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் சிரமப்படுகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பஸ் நிறுத்த நிழற்குடையை புதிதாக அமைப்பதுடன், கூடுதல் இருக்கைகளையும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X