பொது செய்தி

தமிழ்நாடு

எடை கணக்கில் புத்தக விற்பனை கண்காட்சி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் உள்ள சங்கரா ஹாலில், எடை கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட, பழைய ஆங்கில புத்தகங்கள் விற்பனையில் இடம் பெற்றுள்ளன. நேற்று துவங்கிய இந்த புத்தக விற்பனை கண்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைய உள்ளது. காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, விற்பனை நடைபெறும்.லட்சக்கணக்கான
 எடை கணக்கில் புத்தக விற்பனை கண்காட்சி

சென்னை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் உள்ள சங்கரா ஹாலில், எடை கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட, பழைய ஆங்கில புத்தகங்கள் விற்பனையில் இடம் பெற்றுள்ளன. நேற்று துவங்கிய இந்த புத்தக விற்பனை கண்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைய உள்ளது. காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, விற்பனை நடைபெறும்.லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ள இக்கண்காட்சியில், தேர்தெடுக்கப்படும் புத்தகங்களை எடை போட்டு, அதற்கேற்ப பணம் பெற்று கொள்கின்றனர்.கதை, இலக்கிய பொக்கிஷ புத்தகங்கள், கிலோ, 100 ரூபாய்; குழந்தைகளுக்கான படம் மற்றும் கதையல்லாத புத்தகங்கள் கிலோ, 300 ரூபாய்; குழந்தைகளுக்கான பாட புத்தகங்கள் கிலோ, 400 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X