சென்னை- சென்னையில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 15 மண்டலங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவை தலைமைச் செயலர் ராஜிவ்ரஞ்சன் நியமித்துள்ளார். குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ள மருத்துவ அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இக்குழு, நோய் பரவலை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.குழு விபரம்:மண்டலம் - குழுவில் இடம் பெற்றுள்ளோர்திருவொற்றியூர் - ஜானி டாம் வர்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர்; மகேஸ்வரன், டி.ஆர்.ஓ.,; ராமகிருஷ்ணன், உதவி ஐ.ஜி; வடிவேலன், பொது சுகாதாரத்துறை இயக்குனர்.மணலி - கணேசன், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர்; மோகன்ராஜ்,டி.ஆர்.ஓ.,; பழனிகுமார், எஸ்.பி.,; சேரன், சென்னை மருத்துவ கல்லுாரி சமுதாய மருது்துவ இயக்குனர்.மாதவரம் - மோகன், டாஸ்மாக் மேலாண் இயக்குனர்; விஜயா, டி.ஆர்.ஓ.,; தில்லை நடராஜன், எஸ்.பி.,; சேகர், பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்.தண்டையார்பேட்டை - கார்த்திகேயன், டிட்கோ நிர்வாக இயக்குனர்; முனுசாமி, டி.ஆர்.ஓ.,; மணி, எஸ்.பி.,; தேவபார்த்தசாரதி, தேசிய சுகாதார திட்டம் கூடுதல் இயக்குனர்.ராயபுரம் - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி., செயலர்; சக்திவேல், டி.ஆர்.ஓ.,; அன்பரசன், டி.எஸ்.பி.,; ஜெரார்டு மரிய செல்வம், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்.திரு.வி.க.நகர் - நார்ன்வேர் மனிஷ் சங்கர்ராவ், வணிக வரித்துறை இணை இயக்குனர்; ராஜகிருபாகரன், டி.ஆர்.ஓ.,; வேல்மருகன், டி.எஸ்.பி.,; பவானிஉமாதேவி, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்.அம்பத்துார் - சுரேஷ்குமார், சிறுபான்மையினர் நலத்துஐற இயக்குனர்; சுகுமார், டி.ஆர்.ஓ.,; மெகலினா ஐடன், கூடுதல் எஸ்.பி.,; விஜயலட்சுமி, தேசிய சுகாதார திட்டம் இணை இயக்குனர்.அண்ணா நகர் - கோபால சுந்தரராஜ், குடிசை மாற்று வாரியம் இணை இயக்குனர்; மணிமேகலை, டி.ஆர்.ஓ.,; ராமர், எஸ்.பி.,; கிருஷ்ணராஜ், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்.தேனாம்பேட்டை - தீபக் ஜேக்கப், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய திட்ட இயக்குனர்; காளிதாஸ், டி.ஆர்.ஓ.,; கிரிதர், கூடுதல் எஸ்.பி.,; சுரேஷ், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்.கோடம்பாக்கம் - வினீத், மின்வாரியம் இணை மேலாண் இயக்குனர்; அலின் சுனிஜா, டி.ஆர்.ஓ.,; தியாகராஜ், கூடுதல் எஸ்.பி.,; நாகராணி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குனர்.வளசரவாக்கம் - பிரபுசங்கர், சென்னை குடிநீர் வாரியம் நிர்வாக இயக்குனர்; சூர்யபிரகாஷ், டி.ஆர்.ஓ.,; சுபாஷ், டி.எஸ்.பி.,; பானுமதி, சுகாதாரத்துறை பயிற்சி மைய முதல்வர்.ஆலந்துார் - நிர்மல்ராஜ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்; சாந்தகுமார், டி.ஆர்.ஓ.,; ஜெயசந்திரன், எஸ்.பி.,; சாந்தி, சுகாதாரப்பணியாளர் மேம்பாட்டு மைய முதல்வர்.அடையாறு - சந்திரகலா, தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகம் நிர்வாக இயக்குனர்; பரமேஸ்வரி, டி.ஆர்.ஓ.,; கோவிந்தராஜு, டி.எஸ்.பி.,; செந்தில்குமார், தேசிய சுகாதார திட்ட துணை இயக்குனர்.பெருங்குடி - முருகேஷ், வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர்; கோவிந்தராஜன், டி.ஆர்.ஓ.,; வல்லவன், டி.எஸ்.பி.,; பரணிதரன், தமிழ்நாடு பணியாளர் சீர்திருத்த திட்டக் குழுத் தலைவர்.சோழிங்கநல்லுார் - வீரராகவராவ், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர்; பூவராகவன், டி.ஆர்.ஓ.,; திருநாவுக்கரசு, டி.எஸ்.பி.,; சதீஷ்ராகவன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE