100 அடி சாலையில் விபத்து அபாயம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வடபழநி- வடபழநி, 100 அடி சாலையில், வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகளில், மழை நீர் தேங்குவது தடுக்கும் வகையில், வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதில், பெரும்பாலான இடங்களில், வடிகால்கள் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வடிகால்கள் இணைக்கப்படாமலும் உள்ளன.அந்தவகையில், வட பழநி, 100 அடி

வடபழநி- வடபழநி, 100 அடி சாலையில், வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகளில், மழை நீர் தேங்குவது தடுக்கும் வகையில், வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதில், பெரும்பாலான இடங்களில், வடிகால்கள் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வடிகால்கள் இணைக்கப்படாமலும் உள்ளன.அந்தவகையில், வட பழநி, 100 அடி சாலையில், வடிகால் பணிக்காக இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளம், அரைகுறையாக விடப்பட்டுள்ளது.இதனால், போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், தவறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்ளும் நிலையும் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து, பள்ளத்தை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X