பராமரிப்பின்றி வீணாகும் தெரு பெயர் பலகைகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி- தெரு பெயர் பலகைகள் பராமரிப்பில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தேனாம்பேட்டை மண்டலத்தில், 18 வார்டுகளில், ஆயிரக்கணக்கான தெருக்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெரு நுழைவாயில்களில் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன.பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகைகளை,

திருவல்லிக்கேணி- தெரு பெயர் பலகைகள் பராமரிப்பில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தேனாம்பேட்டை மண்டலத்தில், 18 வார்டுகளில், ஆயிரக்கணக்கான தெருக்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெரு நுழைவாயில்களில் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன.பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகைகளை, மாநகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்கவில்லை. இதனால், பல தெருக்களில், பெயர் பலகையே இல்லாமல் காணப்படுகிறது. இதனால், நகரவாசிகள் மற்றும் வெளியூர் வாசிகள், தெரு பெயர்களை அடையாளம் கண்டுகொள்வதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெருவில், தெரு பெயர் பலகையே இல்லாமல் உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X