பொது செய்தி

தமிழ்நாடு

'சிறு வியாபாரம் செய்ய மாற்று இடம் வேண்டும்'

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை - சிறு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என, கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், நாளை முதல் சிறு வியாபாரத்திற்கு தடை

சென்னை - சிறு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என, கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், நாளை முதல் சிறு வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, 5 கிலோவிற்கு மேல் மட்டுமே, பொருட்களை வியாபாரிகளால் விற்பனை செய்ய முடியும். அதற்கு கீழ் விற்பனை செய்தால், அங்காடி நிர்வாக குழு வாயிலாக, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.ஏற்கனவே பல மாதங்களாக சிறு வியாபாரம் நடக்காததால், பல வியாபாரிகள் நஷ்டத்திற்கும், கடன் தொல்லைக்கும் ஆளாகி உள்ளனர். எனவே, சிறு வியாபாரம் செய்வதற்கு, முறையாக மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X