பொது செய்தி

தமிழ்நாடு

அசோக் நகர் நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அசோக் நகர் - அசோக் நகரில், பிரதான சாலையின் நடைபாதை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக, அகலமான நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.அவற்றை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன.மேலும், நடைபாதை நடப்பதற்கே என்றும், யாரேனும்

அசோக் நகர் - அசோக் நகரில், பிரதான சாலையின் நடைபாதை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக, அகலமான நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.அவற்றை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன.மேலும், நடைபாதை நடப்பதற்கே என்றும், யாரேனும் ஆக்கிரமித்தால் புகார் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் கொண்ட பலகைகள், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நடைபாதை ஆக்கிரமிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலம், 132 வார்டுக்குட்பட்ட, அசோக் நகர், 11வது அவென்யூ பிரதான சாலையில், இருபுறமும் நடைபாதைகளில், பலவிதமான கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன் படுத்த முடியாமல், சாலையில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் நடந்து செல்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளால், பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். மாலையில், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X