மணலி - துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, மணலி, ஆண்டார்குப்பம் சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, வட மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார், 27, என்பவர், நண்பருடன் நடந்து சென்றார்.அப்போது, அங்கு சாலையோரம் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர், இவர்களை மடக்கி, வயிற்றில் துப்பாக்கியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.சுதாரித்த வட மாநில நபர்கள், வாலிபரை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று, தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் விஸ்வநாதன், 28, என்பவரிடம், விஷயத்தைக் கூறியுள்ளனர்.விஸ்வநாதன், அவர் சகோதரர் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, மணல் திட்டின் பின்புறம் மறைந்திருந்த வாலிபரை பிடித்து, ரோந்து பணியிலிருந்த, மணலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அந்த வாலிபர், மணலி, காமராஜபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 21, என்பதும், திருவொற்றியூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது.மேலும், பலுான் சுடும் துப்பாக்கியை ஆன்லைனில், 'ஆர்டர்' செய்து வாங்கி, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. விக்னேஷை கைது செய்த போலீசார், அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE