சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு கரன்சிகள் ரூ.51 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை-துபாய்க்கு, இரு வேறு விமானங்களில் கடத்த முயன்ற, 51.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான, அமெரிக்கா, சவுதி, குவைத் மற்றும் ஓமன் நாட்டு கரன்சிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.சென்னையிலிருந்து, நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், துபாய் நகருக்கு செல்லும், 'ஏர் அரேபியா' விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த, திருச்சியைச் சேர்ந்த,

சென்னை-துபாய்க்கு, இரு வேறு விமானங்களில் கடத்த முயன்ற, 51.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான, அமெரிக்கா, சவுதி, குவைத் மற்றும் ஓமன் நாட்டு கரன்சிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.சென்னையிலிருந்து, நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், துபாய் நகருக்கு செல்லும், 'ஏர் அரேபியா' விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த, திருச்சியைச் சேர்ந்த, சதாகத்துல்லா, 37, என்பவரை சந்தேகத்தின்படி, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில், அவர் கொண்டு வந்த 'டிராலி பேக்'கில் சோதனையிட்டதில், அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த, அமெரிக்க டாலர், சவுதி ரியால் கரன்சிகள், இந்தியா ரூபாய் மதிப்பில், 10.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மற்றொரு சம்பவத்தில், சென்னையிலிருந்து துபாய் செல்லும், 'பிளை துபாய்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 11:55 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, சென்னை, திருச்சி, தேனி, சிவகங்கை ஆகிய நகரங்களைச் சேர்ந்த நான்கு பேரின் உடைமைகளை, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில், அவர்களிடமிருந்து, அமெரிக்க டாலர், சவுதி ரியால், குவைத் தினார், ஓமன் ரியால் கரன்சிகள், இந்திய ரூபாய் மதிப்பில், 41.22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு கரன்சிகள் கடத்திய, ஐந்து நபர்களையும் கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X