சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் மீட்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தேனாம்பேட்டை- நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த துப்புரவு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில், துப்புரவு பணிகளை, 'உர்பசர்சுமித்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தினர், குப்பை சேகரிப்பதற்காக, ஏராளமான பேட்டரி

தேனாம்பேட்டை- நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த துப்புரவு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில், துப்புரவு பணிகளை, 'உர்பசர்சுமித்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தினர், குப்பை சேகரிப்பதற்காக, ஏராளமான பேட்டரி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், துப்புரவு பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களில், பதிவு எண் இல்லை எனக்கூறி, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, சில மாதங்களுக்கு முன் வாகனங்களை சிறைபிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இவ்வாறு, சென்னையில், திருவல்லிக்கேணி, அபிராமபுரம், மெரினா உள்ளிட்ட, காவல் நிலையங்களில், தலா, ஆறு வாகனங்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில், குப்பை சேகரிப்பில் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாகனங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, உர்பசர்சுமித் நிறுவனம், அனைத்து வாகனங்களுக்கும் பதிவு எண் வழங்கியது. தற்போது வாகனங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, துப்புரவு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X