சென்னை அடுத்த, திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியம்மாபுரம், புதுார் கிராமத்தைச் சேர்ந்த, 68 வயதான முதியவர் மற்றும் அவரது, 62 வயதான மனைவியும், 10 நாட்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, தம்பதி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, கணவனும், மனைவியும் அடுத்தடுத்து, சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இது குறித்து, பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் கூறியதாவது:தம்பதி இருவரும், இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக, தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவே, சிகிச்சை பலனின்றி இறந்துஉள்ளனர்.இன்று முதல், வள்ளியம்மாபுரம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி, மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE