சென்னை- சட்டசபை தேர்தல் பணியால், இம்மாதம் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதில் தாமதமாகும் என தெரிகிறது.சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி, விதவை உள்ளிட்ட, எட்டு வகையான ஓய்வூதிய திட்டங்களில், மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில், பல்வேறு உதவித்தொகை திட்டங்களில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 632 பயனாளிகள் உள்ளனர்.இந்த உதவித்தொகையானது, ஒவ்வொரு மாதமும், பயனாளிகளின் வங்கி கணக்கில், முதல் வாரத்திலேயே வரவு வைக்கப்படும். அதை, வங்கி முகவர்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குவது வழக்கம்.கடந்த, 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அனைத்து அலுவலர்களும், தேர்தல் பணியில் இருந்ததால், இம்மாதத்திற்கான நிதி, இதுவரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால், உதவித்தொகை வழங்குவதில் தாமதமாகும் என, தகவல் வெளியாகிறது.இது குறித்து, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டரிடம் கேட்ட போது, ''அலுவலர்கள் தேர்தல் பணியில் இருந்ததால், தாமதமாகியது. இன்று அல்லது நாளைக்குள், பயனாளிகளின் வங்கி கணக்கில், உதவித்தொகை வரவு வைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE