பொது செய்தி

தமிழ்நாடு

கவனிப்பாரின்றி கிடக்கும் நீரூற்று

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
-ஆவடி மாநகராட்சி பகுதியில் 2.08 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட நீரூற்றுப் பூங்காக்கள், கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன.கொரோனா வைரஸ் தொற்று, உலக அளவில், 2020ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில், தீவிரமாக பரவியது.அப்போது தான், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் துவங்கின.அதைத்தொடர்ந்து, 2.08 கோடி ரூபாய்

-
ஆவடி மாநகராட்சி பகுதியில் 2.08 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட நீரூற்றுப் பூங்காக்கள், கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன.கொரோனா வைரஸ் தொற்று, உலக அளவில், 2020ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில், தீவிரமாக பரவியது.அப்போது தான், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் துவங்கின.அதைத்தொடர்ந்து, 2.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக, 9 நீருற்று பூங்காக்கள், 'ஐ லவ் ஆவடி செல்பி பாயின்ட்' ஆகியவற்றை உருவாக்கும் பணிகளும் துவங்கின.மேலும், 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 16 பூங்காக்களில், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகளும் துவங்கின.இந்த காலக்கட்டத்தில், கொரோனாதமிழகத்திலும் பரவத் துவங்கியது.ஆனால், 2020 பிப்ரவரியில் துவங்கப்பட்ட பணிகள், மார்ச் மாதத்தில் படுவேகத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் அதே மாதம், 11ம் தேதியன்று, 21 நீரூற்றுப் பூங்காக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், ஆவடி, 'செல்பி பாயின்ட்' ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.ஆனால் தமிழக அரசு, கொரோனா பரவலை தடுக்க, 2020, மார்ச், 25ம் தேதியன்று முழு ஊரடங்கை அமல்படுத்தியது.இதனால் திறக்கப்பட்டு, 19 நாட்களில், நீரூற்றுப் பூங்காக்கள் மூடப்பட்டன. அன்றோடு பூங்கா பராமரிப்பு பணிகளையும், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மறந்து விட்டனர். இதனால், 2.08 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட நீரூற்றுப் பூங்காக்கள், கவனிப்பாரின்றி கிடக்கின்றன.இதில், மக்களின் வரிப்பணம் வீணாகிஉள்ளது.திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை மட்டும், பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால், உபகரணங்கள் துருப்பிடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.வடசென்னை/

நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X