மிரட்டும் இரும்பு துாண்கள் அச்சம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கொரட்டூர்; நெடுஞ்சாலைத்துறை, உபரி நீர் கால்வாய் மீது, மட்டப்பாலம் கட்டும் பணிக்காக வைத்த, அறிவிப்புப் பலகையின் இரும்புத் துாண்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.சென்னை, மாதனாங்குப்பம், கெனால் சாலையின் குறுக்கே, கொரட்டூர் ஏரியின் உபரி நீர், மாதவரம் ரெட்டேரிக்கு பாயும் வடிகால்வாய் உள்ளது. அதன் மீது, 2 ஆண்டுகளுக்கு முன்,

கொரட்டூர்; நெடுஞ்சாலைத்துறை, உபரி நீர் கால்வாய் மீது, மட்டப்பாலம் கட்டும் பணிக்காக வைத்த, அறிவிப்புப் பலகையின் இரும்புத் துாண்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.சென்னை, மாதனாங்குப்பம், கெனால் சாலையின் குறுக்கே, கொரட்டூர் ஏரியின் உபரி நீர், மாதவரம் ரெட்டேரிக்கு பாயும் வடிகால்வாய் உள்ளது. அதன் மீது, 2 ஆண்டுகளுக்கு முன், புதிய மட்டப்பாலம் கட்டப்பட்டது.அந்த பாலம் கட்டும் பணிக்காக, அதன் அருகே, நெடுஞ்சாலைத் துறையின், பாலப்பணி விபரம் கொண்ட அறிவிப்பு பலகை, இரும்புத் துாண்கள் மூலம் அமைக்கப்பட்டது. பணி முடிந்த நிலையில், அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.ஆனால், அதை தாங்கி நின்ற, இரும்புத் துாண்களை அகற்ற முடியாமல், அப்படியே விடப்பட்டன. கெனால் சாலையில், கன ரக வாகன போக்குவரத்தின் அதிர்வு காரணமாக, தற்போது, அந்த இரும்புத் துாண்கள் மெல்ல தளர்ந்து, சாலையில் சாய்ந்து வருகின்றன.இதனால், அந்த இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள், அச்சத்திற்கு ஆளாகின்றனர். அந்த துாண்கள் முழுதுமாக உறுதியிழந்து, திடீரென கீழே விழுந்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவர். அதற்கு முன், அச்சுறுத்தும் இரும்புத் துாண்களை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X