பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மாதவரம்; சேதமடைந்த சாலை பள்ளத்தால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.சென்னை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்துகள் வெளியேறும் நுழைவு வாயில் முதல், 1 கி.மீ., துாரத்திற்கு, மாதவரம், 200 அடி சாலையின், சர்வீஸ் சாலை சேதமடைந்துள்ளது.மேற்கண்ட சாலை வழியாக, எண்ணுார் துறைமுகத்திற்கு சென்று வரும், ஏராளமான கன ரக வாகனங்களின் பாரம்

மாதவரம்; சேதமடைந்த சாலை பள்ளத்தால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.சென்னை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்துகள் வெளியேறும் நுழைவு வாயில் முதல், 1 கி.மீ., துாரத்திற்கு, மாதவரம், 200 அடி சாலையின், சர்வீஸ் சாலை சேதமடைந்துள்ளது.மேற்கண்ட சாலை வழியாக, எண்ணுார் துறைமுகத்திற்கு சென்று வரும், ஏராளமான கன ரக வாகனங்களின் பாரம் தாங்காமல், சாலை மேலும் சேதமடைந்து வருகிறது.சேதமடைந்த இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களால், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகியவை நிலை தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இரவில் அந்த இடத்தில், போதிய வெளிச்சமும் இல்லை. இதனால், நிலைமை மோசமாகிறது.விபத்து, உயிரிழப்பை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையினர், மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் முதல், கில்பன் நகர், மினி ரவுண்டானா சந்திப்பு வரை, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X