சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி சிறுவன் பலி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கொருக்குப்பேட்டை,; கொருக்குப்பேட்டையில், ரயில் மோதியதில், 10 வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.சென்னை, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 40; கூலித்தொழிலாளி.இவரது மகன் சுமன், 10. இவர், நேற்று கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ரயில்வே பாலத்திற்கு கீழே உள்ள மைதானத்தில், கால்பந்து விளையாடுவதற்காக, தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சென்றுள்ளார்.அப்போது, பேசின்பாலம்

கொருக்குப்பேட்டை,; கொருக்குப்பேட்டையில், ரயில் மோதியதில், 10 வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.சென்னை, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 40; கூலித்தொழிலாளி.இவரது மகன் சுமன், 10. இவர், நேற்று கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ரயில்வே பாலத்திற்கு கீழே உள்ள மைதானத்தில், கால்பந்து விளையாடுவதற்காக, தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சென்றுள்ளார்.அப்போது, பேசின்பாலம் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியே மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்தது.இதனிடையே நிலை தடுமாறிய சுமன், ஜல்லி கற்கள் தடுக்கி, தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது, ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X