பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அம்பத்துார்; கோடையில், ஆதரவற்றோர் மற்றும் கால் நடைகளின் தாகம் தீர்க்க, பொதுமக்கள் தங்களால் இயன்ற வகையில், சிறிய தண்ணீர் பந்தல் அமைக்க, முன்வர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில், கோடை காலத்தில், அரசியல்வாதிகள் தங்கள் கட்சியை விளம்பரப்படுத்த, தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம்.தற்போது கோடை துவங்கி, வெயில் வாட்டி

அம்பத்துார்; கோடையில், ஆதரவற்றோர் மற்றும் கால் நடைகளின் தாகம் தீர்க்க, பொதுமக்கள் தங்களால் இயன்ற வகையில், சிறிய தண்ணீர் பந்தல் அமைக்க, முன்வர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில், கோடை காலத்தில், அரசியல்வாதிகள் தங்கள் கட்சியை விளம்பரப்படுத்த, தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம்.தற்போது கோடை துவங்கி, வெயில் வாட்டி வதைக்கிறது. மனிதர்கள் குடிநீர், குளிர்பானம், இளநீர், நீர்மோர் ஆகியவற்றை குடித்து தாகம் தீர்க்கின்றனர்.ஆதரவற்ற சாலையோர மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும், தாகம் தீர்க்க குடிநீருக்காக, அங்கும், இங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது. அதே போன்று, ஆடு, மாடு, நாய், பறவை உள்ளிட்ட உயிரினங்களும், நீரை தேடி அலைகின்றன.பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பெரிய அளவில் தண்ணீர் பந்தல் அமைக்காவிட்டாலும், தங்களால் இயன்ற வகையில், சிறிய தண்ணீர் பந்தலை அமைக்கலாம்.அதன் மூலம், ஆதரவற்றோரும், விலங்குகளும் பறவைகளும் தங்களது தாகத்தை தீர்த்துக் கொள்ளும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X