பொது செய்தி

தமிழ்நாடு

துார்ந்து போன கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
எண்ணுார்; உபரி நீர் மற்றும் கழிவு நீர் வெளியேறும், பிரதான கால்வாய் துார்ந்து போயுள்ளதால், மழைக் காலத்தில் பிரச்னை ஏற்படும் என, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, எண்ணுாரின் உலகநாதபுரம், சத்தியவாணி முத்துநகர், வ.உ.சி., நகர், காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், சாலையை கடக்கும் விதமாக, பிரதான கால்வாய் ஒன்று உள்ளது.தவிர, ஊருக்கு

எண்ணுார்; உபரி நீர் மற்றும் கழிவு நீர் வெளியேறும், பிரதான கால்வாய் துார்ந்து போயுள்ளதால், மழைக் காலத்தில் பிரச்னை ஏற்படும் என, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, எண்ணுாரின் உலகநாதபுரம், சத்தியவாணி முத்துநகர், வ.உ.சி., நகர், காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், சாலையை கடக்கும் விதமாக, பிரதான கால்வாய் ஒன்று உள்ளது.தவிர, ஊருக்கு நடுவே இருக்கும் தாமரைக் குளத்தில் மழை நீர் தேங்கி நிரம்பும் பட்சத்தில், உபரி நீரானது, இந்த பிரதான கால்வாய் வழியாக, முகத்துவாரம் வழியாக சென்று கடலில் கலக்கும்.இக்கால்வாய், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. கால்வாயின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து, மணல் மேடால் அடைபட்டுள்ளது.சில இடங்களில், செடிகள் வளர்ந்து, முட்புதர் மண்டியுள்ளது. இதனால், நீரோட்டம் பாதிக்கிறது. மழைக் காலங்களில் இதே நிலை நீடித்தால், பெரும் சிக்கலாகி விடும்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X