எரிவாயு தகன மேடை பழுது குடியிருப்புகளை சூழும் கரும்புகை| Dinamalar

எரிவாயு தகன மேடை பழுது குடியிருப்புகளை சூழும் கரும்புகை

Added : ஏப் 09, 2021
Share
அனகாபுத்துார்- அனகாபுத்துார் நகராட்சியில், எரிவாயு தகன மேடை பழுதானதால், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் போது வெளியேறும் புகை, அருகேயுள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.அனகாபுத்துார் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில், பம்ப் ஹவுஸ் அருகே, எரிவாயு தகன மேடை உள்ளது. 18 வார்டுகளில் வசிப்போர், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய

அனகாபுத்துார்- அனகாபுத்துார் நகராட்சியில், எரிவாயு தகன மேடை பழுதானதால், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் போது வெளியேறும் புகை, அருகேயுள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.அனகாபுத்துார் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில், பம்ப் ஹவுஸ் அருகே, எரிவாயு தகன மேடை உள்ளது. 18 வார்டுகளில் வசிப்போர், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் எனில், இங்கு தான் வர வேண்டும்.அதேபோல், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களும், இங்கு தான் தகனம் செய்யப்படுகின்றன. எரிவாயு தகன மேடையை பராமரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்கள், ஒரு உடலை தகனம் செய்ய, 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக, இந்த தகன மேடை பழுதாகி காணப்படுகிறது. அப்படியிருந்தும், பழுதை சரிசெய்யாமல், உடல்களை தொடர்ந்து தகனம் செய்கின்றனர். அதுபோன்ற நேரத்தில், வெளியேறும் புகை, மேலே செல்லாமல், ஒட்டியுள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.ஒவ்வொரு உடலை தகனம் செய்யும் போதும், இப்பிரச்னை நிலவுவதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, நகராட்சி கமிஷனர், பொறியாளரிடம் புகார் தெரிவித்தும், பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக, அப்பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தகனம் செய்யும்போது, புகை குடியிருப்புகளை சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.நகராட்சி அதிகாரிகள், இப்பிரச்னையில் தலையிட்டு, பழுதை சரிசெய்து, உடல்களை பாதுகாப்பான முறையில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X