பொது செய்தி

தமிழ்நாடு

சாலை வளைவில் 'ரிப்ளக்டர்'கள் அவசியம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பொன்னேரி; சாலை வளைவுப் பகுதியில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி - பழவேற்காடு செல்லும் சாலையில், ஆண்டார் மடம் அருகே, 'எஸ்' வடிவ வளைவுப் பகுதி உள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஒட்டிகள் இந்த இடத்தை கடக்கும்போது நிலை தடுமாறுகின்றனர்.இங்கு சாலையின்

பொன்னேரி; சாலை வளைவுப் பகுதியில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி - பழவேற்காடு செல்லும் சாலையில், ஆண்டார் மடம் அருகே, 'எஸ்' வடிவ வளைவுப் பகுதி உள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஒட்டிகள் இந்த இடத்தை கடக்கும்போது நிலை தடுமாறுகின்றனர்.இங்கு சாலையின் நடுவில், இரும்பு டிரம்களில் மண் கொட்டி வைத்து, அதில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பல்வேறு கட்சிகளின் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து ரிப்ளக்டர்கள் மறைந்தன. வளைவுப் பகுதி இருப்பதை அறியாமல், வேகமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி சாலையோர மின் கம்பங்களிலும், நடுவில் வைக்கப்பட்டுள்ள இரும்பு டிரம்களிலும், மோதி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் அடிக்கடி மோதியதில், டிரம்களும் சேதம் அடைந்து இருக்கின்றன.விபத்துகளை தவிர்க்க மேற்கண்ட வளைவுப் பகுதியில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தி, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X