பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணி முதல், காலை, 11:00 மணி வரை மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர்.

பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணி முதல், காலை, 11:00 மணி வரை மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.ரூ.200 அபராதம் வசூலிப்புதிருத்தணி: திருத்தணி நகராட்சியில், கொரோனா பரவல் தடுக்க, நகரில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு, தலா, 200 வீதம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:கொரோனாவால், கடந்த மாதம் முதல், நேற்று வரை, நகராட்சியில் மொத்தம், 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 12 பேர் சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகராட்சியில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி, முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து, 18 நாட்களில், 16,500 ரூபாய் அபராதம், சமூக விலகல் கடைப்பிடிக்காத ஆறு கடைகளுக்கு, தலா, 500 ரூபாய் வீதம், 3,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X