பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த மரங்களை அகற்றுவதில் அலட்சியம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
போளிவாக்கம்; போளிவாக்கம் பகுதியில், நெடுஞ்சாலையோரம் முறிந்து இருக்கும் மரங்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி. இப்பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில், ஆல மரம், அரச மரம்,

போளிவாக்கம்; போளிவாக்கம் பகுதியில், நெடுஞ்சாலையோரம் முறிந்து இருக்கும் மரங்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி. இப்பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில், ஆல மரம், அரச மரம், புளிய மரம் என, 500க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.இந்த நெடுஞ்சாலையில், போளிவாக்கம், சத்திரம், காந்தி நகர், செங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில், சாலையோரம் ஏழுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன.மேலும், சில பகுதிகளில் மரத்தின் கிளைகள் முறிந்து இருக்கின்றன. இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரம் முறிந்து இருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X