திருவள்ளூர் மாவட்டத்தில் 69.51 சதவீதம் ஓட்டுப்பதிவு: 10.70 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் 69.51 சதவீதம் ஓட்டுப்பதிவு: 10.70 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை

Added : ஏப் 09, 2021
Share
திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளிலும், 69.51 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்த வாக்காளர்களில், 10 லட்சத்து, 70 ஆயிரத்து, 525 பேர், ஓட்டு போடவில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ஆண்கள் 17 லட்சத்து, 35

திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளிலும், 69.51 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்த வாக்காளர்களில், 10 லட்சத்து, 70 ஆயிரத்து, 525 பேர், ஓட்டு போடவில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ஆண்கள் 17 லட்சத்து, 35 ஆயிரத்து, 763, பெண்கள், 17 லட்சத்து, 75 ஆயிரத்து, 17, திருநங்கையர் 777 என, மொத்தம், 35 லட்சத்து, 11 ஆயிரத்து, 557 வாக்காளர்கள் உள்ளனர். 10 சட்டசபை தொகுதிகளிலும், 164 பேர் போட்டியிட்டனர்.கடந்த, 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிவில், 69.51 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்த வாக்காளர்களில், 10 லட்சத்து, 70 ஆயிரத்து, 525 பேர், ஓட்டு போடவில்லை.கடந்த பொதுத்தேர்தலில் பதிவான, 71.27 சதவீதத்தில், 1.76 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன.கடந்த, 2016 பொதுத்தேர்தலில், 10 தொகுதிகளிலும், 71.20 சதவீதம் ஓட்டு பதிவானது. அந்த தேர்தலில், அதிகபட்சமாக, கும்மிடிப்பூண்டியில், 81.38 சதவீதமும், குறைவாக, மதுரவாயலில், 61.87 சதவீதமும் ஓட்டு பதிவானது. இந்த தேர்தலில், 69.51 சதவீதம் ஓட்டுகளே பதிவாகின. இது, கடந்த, தேர்தலை விட, 1.76 சதவீதம் குறைவாகும்.இருப்பினும், அமைச்சர்கள் போட்டியிட்ட, ஆவடி மற்றும் மதுரவாயலில் மட்டும், முறையே, 0.63 மற்றும் 0.87 என்ற விகிதத்தில், கூடுதல் ஓட்டுகள் பதிவாகின.மற்ற, எட்டு தொகுதிகளிலும், ஓட்டு சதவீதம் குறைந்து உள்ளது. இதற்கு காரணம், கொரோனா தொற்று அச்சம், ஓட்டுப்பதிவு போட ஆர்வமின்மையே என, வாக்காளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X