கடம்பத்துார்; கடம்பத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், பணம் இல்லாததால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஊராட்சி, கசவநல்லாத்துாரில் உள்ளது, கடம்பத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வங்கி. இந்த வங்கியில், கடம்பத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.இந்த வங்கியில், 10 தினங்களாக பணம் இல்லாததால், வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கு, டெபாசிட் முதிர்வுத்தொகை, நகைக்கடன் போன்றவற்றிற்கு கூட பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வங்கியிலேயே பணம் இல்லாதது வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.இதுகுறித்து வங்கி செயலர் கூறுகையில், ''காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியிலிருந்து, எங்களது கிளைக்கு தேவையான பணம் வராததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க முடியவில்லை. வரும், திங்கள்கிழமை முதல், பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE