கார் கண்ணாடி உடைத்து திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கண்ணாடி உடைத்து திருட்டு

Added : ஏப் 09, 2021
Share
சோழவரம்; தனியார் நிறுவன அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து, 1.10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 50. தனியார் நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம், சோழவரம் அருகே உள்ள கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் சென்றார்.சோழவரம் அடுத்த, தேவனேரியில், சென்னை- -

சோழவரம்; தனியார் நிறுவன அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து, 1.10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 50. தனியார் நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம், சோழவரம் அருகே உள்ள கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் சென்றார்.சோழவரம் அடுத்த, தேவனேரியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பார்த்தபோது, அங்கு வைத்திருந்த, 1.10 லட்சம் ரூபாய் பணம், வங்கி ஆவணங்கள் ஆகியவை இருந்த, பேக் திருடு போயிருப்பது தெரிந்தது.இது குறித்து, ராம்குமார், சோழவரம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X