சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் கொரோனாவுக்கு தம்பதி பலி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருத்தணி; கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் இறந்தனர்.திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம், புதுார் கிராமத்தைச் சேர்ந்த, 68 வயதான முதியவர், அவரது, 62 வயதான மனைவியும், பத்து நாட்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, தம்பதியினர் இருவரும், சென்னை அரசு பொது மருத்துவமனையில்

திருத்தணி; கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் இறந்தனர்.திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம், புதுார் கிராமத்தைச் சேர்ந்த, 68 வயதான முதியவர், அவரது, 62 வயதான மனைவியும், பத்து நாட்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, தம்பதியினர் இருவரும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில், கணவனும், மனைவியும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இது குறித்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் கூறியதாவது:கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட கணவன், மனைவிக்கும், இதயம் மற்றும் சிறுநீரகம் கோளாறு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.இந்நிலையில், தம்பதியினருக்கு கூடுதலாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், இறந்துள்ளனர். இன்று முதல், வள்ளியம்மாபுரம் கிராமத்தில், சிறப்பு முகாம் நடத்தி, மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்யப்படும்.ஒரே நாளில் கணவன், மனைவியும் அடுத்தடுத்து இறந்ததால், வள்ளியம்மாபுரம் கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X