பொது செய்தி

தமிழ்நாடு

பெண் ஊழியருக்கு கொரோனா இ - சேவை மையம் மூடல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருத்தணி; தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் 'ஆதார் கார்டு' எடுக்கும் இ - சேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்றால், மூன்று நாட்களுக்கு மையம் மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று, சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த மாதம் முதல், நேற்று வரை, திருத்தணி தாலுக்காவில், 60க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று

திருத்தணி; தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் 'ஆதார் கார்டு' எடுக்கும் இ - சேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்றால், மூன்று நாட்களுக்கு மையம் மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று, சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த மாதம் முதல், நேற்று வரை, திருத்தணி தாலுக்காவில், 60க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தம்பதியினர் இருவர் மட்டுமே இறந்துள்ளனர்.இந்நிலையில், திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் கீழ் தளத்தில் ஆதார் கார்டு எடுக்கும் இ - சேவை மையத்தில், பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அந்த பெண் ஊழியர் சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால், ஆதார் கார்டு எடுக்கும் இ - சேவை மையம், நேற்று முதல், மூன்று நாட்கள் மூடப்படும். எனவே, வரும் திங்கட்கிழமை ஆதார் கார்டு இ - சேவை மையம் மீண்டும் திறந்து செயல்படும் என, அத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X