பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வீடுகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை; 'கோடை கால திருடர்களிடம் இருந்து, நகை, பணம் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், காற்றுக்காக கதவு, ஜன்னலை திறந்து வைத்து துாங்க வேண்டாம்' என, சென்னை வாசிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர், தற்போது கோடை காலம் என்பதால் காற்றுக்காக, கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து துாங்குகின்றனர். இது, 'சீசன்' திருடர்களுக்கு

சென்னை; 'கோடை கால திருடர்களிடம் இருந்து, நகை, பணம் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், காற்றுக்காக கதவு, ஜன்னலை திறந்து வைத்து துாங்க வேண்டாம்' என, சென்னை வாசிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர், தற்போது கோடை காலம் என்பதால் காற்றுக்காக, கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து துாங்குகின்றனர். இது, 'சீசன்' திருடர்களுக்கு கொண்டாட்டம் தான்.கதவு, ஜன்னல்களை திறந்து துாங்குபவர்களின் வீடுகளை நோட்டமிட்டு, சிரமமின்றி பூட்டை உடைக்காமல், நகை, பணம் என, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் திருடிச் சென்றுவிடுவர்.இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது பற்றி, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளியூர் செல்வது பற்றி, மளிகை, சலுான் கடைகள், பஸ், ரயில் நிலையங்கள் என, பொது இடங்களில் பேசக்கூடாது.  வெளியூர்களுக்கு, பஸ், ரயில், கால் டாக்சி என, எந்த வாகனத்தில் சென்றாலும், பீரோ சாவி எங்கே; நகை பெட்டி பத்திரமா; வீட்டு சாவியை எங்கே வைத்தாய் என்பது போன்ற உரையாடல்களை தவிர்க்க வேண்டும். உடன் பயணிப்பவர் திருடராக கூட இருக்கலாம். வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வது பற்றி, அருகில் உள்ள காவல் நிலையத்தில், கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது, பூட்டி கிடக்கும் வீடுகள் மீது, போலீசார் தனிக்கவனம் செலுத்த இயலும். வீட்டிற்கு தரமான பூட்டு போட வேண்டும். வெளியூர் சென்ற பின், வீட்டை பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது நல்லதல்ல. உறவினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அங்கு ஆட்கள் இருப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். திருடனை ஏமாற்றி விடலாம் என, புத்தக அலமாரி, கட்டில் மெத்தை, தலையணை உறை, மசாலா டப்பா என, எந்த இடத்திலும் நகையை வைத்துச் செல்ல வேண்டாம். வங்கி லாக்கரில் வைத்துச் செல்வது நல்லது. ஜன்னல் ஓரத்தில் பீரோ இருந்தால், அதை கட்டாயம், வீட்டின் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திவிட வேண்டும். மொட்டை மாடியில் துாங்கச் செல்லும் போதும், வீட்டில் ஒரு விளக்கையாவது போட்டு செல்ல வேண்டும். ஜன்னல், கதவுகளை திருடர்களால் உடைக்கவே முடியாது என, கருத வேண்டாம். காற்றுக்காக கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து துாங்க வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X