பொது செய்தி

தமிழ்நாடு

'அரியர்' தேர்வு உண்டா? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: 'அரியர்' மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முடிவை, மே, 3 வரை தள்ளிவைக்க, உயர் கல்வித்துறை தீர்மானித்து உள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டும், கொரோனா தீவிர பரவல் காரணமாக,
arrear exams, all pass, TN govt, arrear

சென்னை: 'அரியர்' மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முடிவை, மே, 3 வரை தள்ளிவைக்க, உயர் கல்வித்துறை தீர்மானித்து உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டும், கொரோனா தீவிர பரவல் காரணமாக, பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வரிசையில், கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர, மற்ற அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.

இந்த உத்தரவால், 30 ஆண்டுகளுக்கு மேலாக, 'அரியர்' வைத்திருந்தவர்களும், தேர்வே எழுதாமல், தேர்ச்சி பெற்றனர். இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை, 'ஆல் பாஸ்' செய்தது, ஏற்க முடியாது என்றும் விமர்சனம் செய்தனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'அரியர் மாணவர் களுக்கு ஏதாவது ஒரு தேர்வு வைக்க வேண்டும். ஆல் பாஸ் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.


latest tamil news



இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய நிலையில், அரியர் தேர்வை நடத்தும் முடிவை, மே, 3 வரை தள்ளி வைக்க, உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. வரும், 15ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டலாம் என, யோசிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அரசு அமைந்த பின், அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று முடிவெடுக்கலாம் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202123:01:10 IST Report Abuse
ஆப்பு அதிமுக ஜெயிச்சா அரியர் ஆளுங்களுக்கு அரசு வேலையும் கிடைக்கும். ஆட்சி முடிவு, கொள்கை முடிவில் நீதிபதிகள் ஏகத்துக்கு மூக்கை நுழைக்கிறாங்க.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
09-ஏப்-202109:17:58 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN தமிழக அரசின் ஒவ்வொரு முடிவிலும் ஏதாவது ஒரு பொது நல வழக்கு என்ற பெயரில் அனைத்து விஷயங்களிலும் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அனைத்து வழக்குகளிலும் நீதி மனறம் தமிழக அரசின் கருத்துக்களை கேட்காமல் கேள்வி கனைகளையே தொடுத்துள்ளது அரசுக்கு எதிராக. இது ஜெயலலிதா காலம் தொட்டே நடந்துள்ளது. ஆனால் திமுக அட்சி செய்த போது இது போன்று நீதி மன்றம் தலையீடு மிகவும் குறைவு. ஜெயலலிதா பெண் என்பதால் ஆண் ஆதிக்கம் காரணமாக தொடுக்க பட்ட வழக்குகளா என்று விசாரணை செய்ய வேண்டும். அதே போல் திமுக ஆட்சி காலத்தில் குறைவாகவும் அதிமுக ஆட்சி காலத்தில் அதிகமாக ஏன் உள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும். ஏறக்குறைய பழனிச்சாமி ஆட்சி காலத்தில் அவர் ஆட்சியே செய்ய முடியாமல் ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தில் விளக்கம் கொடுத்தே திட்டங்களையும் முடிவுகளையும் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு பதிலாக நீதிமன்றமே ஆட்சி பொறுப்பு ஏற்றுக்கொள்ளலாமே. கால விரயம் தவிர்க்கப்படும் அல்லவா.
Rate this:
வரிசெலுத்தும் மூடன்2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவை, 2021 வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் வெளியிடாத நீதிமன்றத்தால் பொதுமக்களுக்கு என்ன பயன்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X