கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

Added : ஏப் 09, 2021
Share
மதுராந்தகம்; மதுராந்தகம் அருகே, தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்கிய வாலிபர், தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிர் இழந்தார்.மதுராந்தகம் வட்டாரம், பெரும்பேர்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 32. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டில் இருந்து, கீழ்மின்னல் கிராமத்திற்கு, தன் நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார்.வழியில், கீழ்மின்னல்,

மதுராந்தகம்; மதுராந்தகம் அருகே, தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்கிய வாலிபர், தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிர் இழந்தார்.மதுராந்தகம் வட்டாரம், பெரும்பேர்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 32. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டில் இருந்து, கீழ்மின்னல் கிராமத்திற்கு, தன் நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார்.வழியில், கீழ்மின்னல், வெற்றிவேல் நகரில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் குடிக்க இறங்கியதாக தெரிகிறது. அப்போது, கிணற்று படியில் இருந்து தவறி விழுந்த அவர், தண்ணீரில் மூழ்கினார்.தகவலறிந்து வந்த ஒரத்தி போலீசார், வாலிபர் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X