குடும்ப சண்டையில்கர்ப்பிணி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப சண்டையில்கர்ப்பிணி தற்கொலை

Added : ஏப் 09, 2021
Share
காஞ்சிபுரம்; தம்பதி இடையே நடந்த குடும்ப சண்டையில், கர்ப்பிணி, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.காஞ்சிபுரம் அடுத்த, வேடல் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு மனைவி சரண்யா, 25. இருவரும், காஞ்சிபுரம் அதியமான் நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சரண்யா, மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு, உடலுக்கு முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கணவர் குடித்து

காஞ்சிபுரம்; தம்பதி இடையே நடந்த குடும்ப சண்டையில், கர்ப்பிணி, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.காஞ்சிபுரம் அடுத்த, வேடல் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு மனைவி சரண்யா, 25. இருவரும், காஞ்சிபுரம் அதியமான் நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சரண்யா, மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு, உடலுக்கு முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கணவர் குடித்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரண்யா, வீட்டின் உள்ளே சென்று, கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார்.சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று, கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின், தகவல் அறிந்து சென்ற தாலுகா போலீசார், துாக்கில் தொங்கிய சரண்யாவை பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரிந்தது. அந்த உடலை, போலீசார் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X