திருப்போரூர் தொகுதியில் பிரச்னை இல்லாததால் நிம்மதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூர் தொகுதியில் பிரச்னை இல்லாததால் நிம்மதி

Added : ஏப் 09, 2021
Share
மாமல்லபுரம்; திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில், பா.ம.க., - வி.சி., கட்சிகள், கூட்டணி கட்சிகள் மோதியதால், பதற்றம் ஏற்படுமோ என, அச்சப்பட்ட நிலையில், பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தலால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.தமிழகத்தில், கடந்த, 6ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில்,

மாமல்லபுரம்; திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில், பா.ம.க., - வி.சி., கட்சிகள், கூட்டணி கட்சிகள் மோதியதால், பதற்றம் ஏற்படுமோ என, அச்சப்பட்ட நிலையில், பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தலால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.தமிழகத்தில், கடந்த, 6ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், வி.சி., என, போட்டியிட்டன. செய்யூர் - தனி தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், வி.சி., என, போட்டியிட்டன.அரசியல் களத்தில், இவ்விரு கட்சிகளும், எதிரும்புதிருமான மோதல் கட்சிகள். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல்களில், இக்கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இத்தேர்தலில், இரு தொகுதிகளிலும், இக்கட்சிகள், கூட்டணி கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டதால், தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவு களத்தில், பதற்றம், மோதல் ஏற்படலாம் என, பொதுமக்களிடம் அச்சம் பரவியது.கடந்த, 2016 தேர்தலில், துணை ராணுவம் மற்றும் கூடுதல் போலீசாருடன், பாதுகாப்பை பலப்படுத்தி, பதற்றம், மோதல் தவிர்க்கப்பட்டது. தற்போதும், இவ்வாறே, பலத்த பாதுகாப்பால், பதற்றம் இன்றி, தேர்தல் முடிந்ததால், இத்தொகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X