போலீஸ் டைரி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மகனை தாக்கிய தந்தை கைதுதிருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த, புலியூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 48. இவரது மகன், கிரிதரன், 17. தந்தைக்கு இரு மனைவியர். ஒரே வீட்டில் வசித்த நிலையில், இது தொடர்பாக, தந்தை - மகன் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று பகல், 1:00 மணிக்கு, இவர்கள், தர்ப்பூசணி விற்பனை செய்யும் பகுதியில் தகராறு ஏற்பட்டு, தந்தை, மகனை கத்தியால்

மகனை தாக்கிய தந்தை கைதுதிருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த, புலியூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 48. இவரது மகன், கிரிதரன், 17. தந்தைக்கு இரு மனைவியர். ஒரே வீட்டில் வசித்த நிலையில், இது தொடர்பாக, தந்தை - மகன் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று பகல், 1:00 மணிக்கு, இவர்கள், தர்ப்பூசணி விற்பனை செய்யும் பகுதியில் தகராறு ஏற்பட்டு, தந்தை, மகனை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த மகன், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருக்கழுக்குன்றம் போலீசார், தந்தையை கைது செய்தனர்.மூதாட்டி விஷம் அருந்தி பலிதிருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த, தத்தலுாரைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு மனைவி ராதா, 70. இரு மகன்கள், இருவரும் இவரை பார்த்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இளைய மகனுக்கு, மகன் உள்ள நிலையில், மகனை, மருமகள் விவாகரத்து செய்ததால், அவர், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த ராதா, ஏப்., 2ல், எலி மருந்து அருந்தி, தற்கொலைக்கு முயன்று, செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X