பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலத்தவர் வருகைக்கு சுற்றுலா தலங்களில் வருமா தடை?

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழக சுற்றுலா தலங்களுக்கு, வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயம் உருவாகி உள்ளது.நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுலா தலங்கள் உள்ளன. மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆன்மிக தலங்களும் உள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி,
Tourist Places, Tamil Nadu, Corona Virus, Covid 19

சென்னை: தமிழக சுற்றுலா தலங்களுக்கு, வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுலா தலங்கள் உள்ளன. மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆன்மிக தலங்களும் உள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தவரும் இங்கு வந்து செல்வது வழக்கம்.

மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். கோடை காலம் என்பதால், வெளிமாநில சுற்றுலா பயணியர் வருகையும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவும் மாநிலங்களான கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், டில்லியில் இருந்தும் சுற்றுலா பயணியர், ஆன்மிக பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது.


latest tamil news



சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களில், வெளிமாநிலத்தவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகங்கள் விழித்துக் கொண்டு, இதற்கான பணிகளை முடுக்கி விட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சுற்றுலா பயணியர் அதிகளவில் கூடும் பூங்காக்கள், பொழுது போக்கு மையங்கள் உள்ளிட்டவற்றை, முறையாக கண்காணிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202122:59:25 IST Report Abuse
ஆப்பு அவிங்களை உடுங்க. உள்ளூர் ஆளுங்களையே ரவுண்டு கட்டி அடிச்சு, அபராதம் வசூல் பண்ணி முடக்க அரசு தயாராயிட்டு வருது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202118:46:05 IST Report Abuse
தமிழவேல் தேர்தலுக்கு, ஒரு கும்பல், வடக்கிலிருந்து வந்து கூட்டம் கூட்டியபோது இதையே ஏன் கேட்க வில்லை ?
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
09-ஏப்-202112:01:44 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி...சுற்றுலா தளங்களில் வெளிமாநிலத்தவரை வரவிடலாம் அதில் தவறேதும் இல்லை. ஆனால் திருட்டு திமுககாரர்களை வரவிடவேண்டாம். பத்து வருடம் கொள்ளை அடிக்க முடியாமல் காய்ந்து கிடைப்பதால் சுற்றுலா பயணிகளிடம் இருந்து திருட்டு திமுகவினர் எதையாவது ஆட்டையை போட வாய்ப்புள்ளது. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X