பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலே முடிந்து விட்டது; தேவையா நடத்தை நெறிமுறை?

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை: தேர்தல் முடிந்தபிறகும், நடத்தை நெறிமுறைகளின், 'கிடுக்கிப்பிடி' தொடர்வதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சட்டசபை தேர்தல், ஏப்.,6ல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே, நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. அதுவரை, நடத்தை நெறிமுறைகள் தொடரும் என்கிறது தேர்தல் ஆணையத்தின் விதி.மக்களை பாதிக்கும்
ELECTION, RULES, ELECTION COMMISSION, PEOPLE, தேர்தல், தமிழக சட்டசபை, விதிமுறைகள்,  நடத்தை விதிகள்

கோவை: தேர்தல் முடிந்தபிறகும், நடத்தை நெறிமுறைகளின், 'கிடுக்கிப்பிடி' தொடர்வதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டசபை தேர்தல், ஏப்.,6ல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே, நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. அதுவரை, நடத்தை நெறிமுறைகள் தொடரும் என்கிறது தேர்தல் ஆணையத்தின் விதி.மக்களை பாதிக்கும் பல்வேறு விஷயங்களில் அரசு அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பதற்கு இந்த நடத்தை நெறிமுறைகள் தடையாக இருக்கின்றன. காலத்துக்கு தகுந்தபடி நடத்தை நெறிமுறைகளை தளர்வு செய்து கொண்டால், அப்பாவி பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.


latest tamil news



அரசு அலுவலர்கள் கூறியதாவது: நடத்தை நெறிமுறைப்படி, எந்த மாவட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தக்கூடாது. விவசாயிகள் குறைதீர்ப்பு உட்பட எந்த விதமான குறைதீர்க்கும் நிகழ்ச்சியும் நடத்த முடியாது. அவசர பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காண விரும்புவோர், நடத்தை நெறிமுறை என்ற பெயரில் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வீண் பிரச்னை வரும் என்று கருதியே, பெரும்பாலான அதிகாரிகள், மனு வாங்கக்கூட மறுக்கின்றனர். எனவே, அந்தந்த மாநில ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், குறைதீர் கூட்டங்களை நடத்த, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குவதே சிறந்த முடிவு. இவ்வாறு, அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
09-ஏப்-202119:09:53 IST Report Abuse
S.Ganesan கண்டிப்பாக கட்டுப்பாடு தேவை. அரசு ஊழியர்களுக்கு வசூல் அடிபடுகிறது. வசூல் பணத்தை எடுத்து சென்றால் எங்காவது சிக்கி கொள்வோம் என்ற பயம்தான். மற்றபடி மக்கள் கஷ்ப்படுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் நாடகம். ஆடு நனைகிறதே என்று அழுகிற ஓநாய் கூட்டம் அவர்கள்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-ஏப்-202113:38:30 IST Report Abuse
சீனி அரசியல் கட்சி கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு போட வராம ஏமாத்தின அப்பரசாண்டிகளை தான் தேர்தல் கமிசன் தேடிக்கிட்டு இருக்காம்... :)
Rate this:
Cancel
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
09-ஏப்-202113:33:07 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் பழனி எங்கே பாவம் நான்கு வருடம் காப்பற்றிய கூட்டமே இப்போ இவருக்கு எமனா வந்த வினை , சாணக்கிய சகுனி சொல்லிச்சி தினகரனை சேர்த்துக்கோ என்று இவன் கெடட நேரம் premalatha விலகியது இப்படி எல்லாம் கடவுள் வெச்ச அப்பு பழனிக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X