தேர்தலே முடிந்து விட்டது; தேவையா நடத்தை நெறிமுறை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலே முடிந்து விட்டது; தேவையா நடத்தை நெறிமுறை?

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (11)
Share
கோவை: தேர்தல் முடிந்தபிறகும், நடத்தை நெறிமுறைகளின், 'கிடுக்கிப்பிடி' தொடர்வதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சட்டசபை தேர்தல், ஏப்.,6ல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே, நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. அதுவரை, நடத்தை நெறிமுறைகள் தொடரும் என்கிறது தேர்தல் ஆணையத்தின் விதி.மக்களை பாதிக்கும்
ELECTION, RULES, ELECTION COMMISSION, PEOPLE, தேர்தல், தமிழக சட்டசபை, விதிமுறைகள்,  நடத்தை விதிகள்

கோவை: தேர்தல் முடிந்தபிறகும், நடத்தை நெறிமுறைகளின், 'கிடுக்கிப்பிடி' தொடர்வதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டசபை தேர்தல், ஏப்.,6ல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே, நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. அதுவரை, நடத்தை நெறிமுறைகள் தொடரும் என்கிறது தேர்தல் ஆணையத்தின் விதி.மக்களை பாதிக்கும் பல்வேறு விஷயங்களில் அரசு அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பதற்கு இந்த நடத்தை நெறிமுறைகள் தடையாக இருக்கின்றன. காலத்துக்கு தகுந்தபடி நடத்தை நெறிமுறைகளை தளர்வு செய்து கொண்டால், அப்பாவி பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.


latest tamil news



அரசு அலுவலர்கள் கூறியதாவது: நடத்தை நெறிமுறைப்படி, எந்த மாவட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தக்கூடாது. விவசாயிகள் குறைதீர்ப்பு உட்பட எந்த விதமான குறைதீர்க்கும் நிகழ்ச்சியும் நடத்த முடியாது. அவசர பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காண விரும்புவோர், நடத்தை நெறிமுறை என்ற பெயரில் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வீண் பிரச்னை வரும் என்று கருதியே, பெரும்பாலான அதிகாரிகள், மனு வாங்கக்கூட மறுக்கின்றனர். எனவே, அந்தந்த மாநில ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், குறைதீர் கூட்டங்களை நடத்த, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குவதே சிறந்த முடிவு. இவ்வாறு, அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X