பொது செய்தி

தமிழ்நாடு

மறந்து போனதேன் சுகாதாரத்துறையே: மக்காத பிளாஸ்டிக் கையுறை வழங்கலாமா?

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை: ஐம்பது மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடை அமலில் இருக்கும்போது, ஓட்டுப்போட வந்தவர்களுக்கு, 10 மைக்ரானுக்கு உட்பட்ட, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்கியது சரி தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால், சட்ட சபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக,
சுகாதாரத்துறை,  மக்காத பிளாஸ்டிக், கையுறை, தடை, அரசு,

கோவை: ஐம்பது மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடை அமலில் இருக்கும்போது, ஓட்டுப்போட வந்தவர்களுக்கு, 10 மைக்ரானுக்கு உட்பட்ட, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்கியது சரி தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால், சட்ட சபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.


பிளாஸ்டிக் கையுறை ஏன்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை, அனைத்து வாக்காளர்களும் அழுத்த வேண்டும்; கையெழுத்திட வேண்டும் என்பதால், ஆளுக்கொரு கையுறை வழங்கப்பட்டது.50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாதென்கிற, தமிழக அரசின் உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.அந்த உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. ஓட்டுச்சாவடியில் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் கையுறை, 10 மைக்ரானுக்கு உட்பட்டது; எளிதில் மக்கும் தன்மையற்றது. அவற்றை தனியாக சேகரித்து, 'பயோமெடிக்கல்' கழிவாக பாவித்து, இன்சினரேட்டர் மூலமாக எரியூட்ட உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்காக, ஒவ்வொரு சாவடிக்கும் குப்பை தொட்டியும், மஞ்சள் நிற பேக்கும் வழங்கப்பட்டிருந்தது.


தொற்று பரவல் அபாயம்

அதன்படியே பிளாஸ்டிக் கையுறை சேகரிக்கப்பட்டது. சில ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் பலரும் குப்பை தொட்டியில் போடாமல், சமுதாய அக்கறையின்றி, ஆங்காங்கே வீசியெறிந்து சென்றனர். ஓட்டுச்சாவடியில் பணிபுரிந்த இதர தொழிலாளர்கள், அவற்றை பொறுக்கி, மூட்டையாக 'பேக்' செய்து, குப்பை லாரியில் அனுப்பி வைத்தனர்.தொற்று பரவல் தடுக்க கையுறை வழங்கும் நடைமுறை சரியாக இருப்பினும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 10 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் கையுறையை, மருத்துவத்துறையே வழங்கியிருப்பது, வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்தது.


latest tamil news


தேர்தல் பிரிவினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:முக கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவை பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டது. கழிவுகளை உள்ளாட்சி அமைப்பினர் சேகரித்து, 'பயோமெடிக்கல்' கழிவுகளை, எரியூட்டும் இடத்துக்கு வழங்க வேண்டும் என்பது உத்தரவு.கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் கழிவுகள் அவ்வாறு அனுப்பப்படலாம். மாநகராட்சி எல்லையை தாண்டிய, மாவட்டத்தின் பிற பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், பொதுக்குப்பையோடு கலக்கவே வாய்ப்பிருக்கிறது. கையுறை பயன்படுத்தியவர்கள் யாருக்கேனும் தொற்று இருந்திருந்தால், அதை கையால் தொடும் துாய்மை பணியாளர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
09-ஏப்-202120:23:47 IST Report Abuse
ocean மாட்டிக்கினான் ஆஹா மாட்டிக்கினான்.பூட்ட கேசு .
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஏப்-202118:56:53 IST Report Abuse
Loganathan Kuttuva எங்கள் பகுதியில் கையுறை வழங்கப்படவில்லை .நான் கொண்டு சென்ற பேனாவினால் தான் பட்டனை அழுத்தினேன் .
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் என்ன புதுசா கேக்கறாங்க நாம எப்பவுமே சொல்றது ஒண்ணோ செய்யறது ஒண்ணுதானே ஊருக்குத்தானே உபதேசம் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லைன்னு சுகாதார மந்திரி சொல்றார் 'நீங்கல்லாம் படிச்சவங்கதானே ஒரே இடத்துல குவிக்காம எல்லா இடத்திலேயும் கிடைக்கிற மாதிரி செய்யுங்க"ன்னு போட்டு உடைக்கிறார் அப்போ வழக்கம்போல எங்கோ எல்லாத்தையும் தள்ளிக்கிட்டு போய்ட்டாங்கபோல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X