பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளின் குட்டிகளுக்கு, 'இன்குபேட்டர்'

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தேசிய அளவில், 44 உயிரியல் பூங்காக்கள், 247 வன விலங்கு சரணாலயங்கள் இருந்தும், அழியும் நிலையில் உள்ள வன விலங்குகளை பாதுகாப்பது நம் வனத்துறைக்கு, கடினமானதாகவே நீடித்து வருகிறது. அதிலும், குறைப் பிரசவம், குறைவான எடை உட்பட, பல்வேறு காரணங்களால் பிறக்கும் விலங்குகள், மரணத்தை தழுவுவதை கையாள்வது, பெரும் சவாலாக உள்ளது.இதை மாற்றும் வகையில், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 'நியோ
  விலங்குகளின் குட்டிகளுக்கு, 'இன்குபேட்டர்'

தேசிய அளவில், 44 உயிரியல் பூங்காக்கள், 247 வன விலங்கு சரணாலயங்கள் இருந்தும், அழியும் நிலையில் உள்ள வன விலங்குகளை பாதுகாப்பது நம் வனத்துறைக்கு, கடினமானதாகவே நீடித்து வருகிறது.

அதிலும், குறைப் பிரசவம், குறைவான எடை உட்பட, பல்வேறு காரணங்களால் பிறக்கும் விலங்குகள், மரணத்தை தழுவுவதை கையாள்வது, பெரும் சவாலாக உள்ளது.இதை மாற்றும் வகையில், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 'நியோ நேடல் கேர்' எனப்படும், பச்சிளம் குட்டிகள் பராமரிப்பு பிரிவு செயல்படுகிறது. இது குறித்து, பூங்காவின் கால்நடை டாக்டர் ஸ்ரீதர், 35, விவரித்தார்.

நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களிலேயே முதல் முறையாக, வண்டலுார் உயிரியல் பூங்காவில், பச்சிளம் குட்டிகளை பாதுகாக்கும் வகையில், தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட குட்டிகள்வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் குட்டிகள்; உயிரியல் பூங்காவில், பிறந்து ஒரே நாளாகி, தாய் விலங்குகளால் கைவிடப்பட்ட குட்டிகள்; மாமிச உணவுகளை உட்கொள்ளும் விலங்குகளுக்கு பிறந்து, அந்த தாய் விலங்கின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குட்டிகள்.காடுகளில் மற்ற விலங்குகளால் தாக்கப்பட்டு, மீட்டுக் கொண்டு வரப்படும் குட்டிகள் மற்றும் பல்வகை பறவை இனங்களின் குஞ்சுகளை, இப்பிரிவு வாயிலாக காப்பாற்றலாம்.

அந்த வகையில், 2019, பிப்., 2ல், தாய்லாந்தில் இருந்து, விமானத்தில், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, பிறந்து ஒரே நாளான, சிறுத்தை குட்டியை மீட்டு, நல்ல நிலையில் வளர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு வகையான, கிளி இனங்கள், மான்கள் ஆகியவையும், பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன.நம் பூங்காவை பொறுத்தவரை, குட்டியிட்ட விலங்குகளை, 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணிக்க முடியும்.இதை வைத்து, புதிதாக பிறந்த குட்டிகளுக்கு, தாய் விலங்கு தாய்ப்பால் ஊட்டுகிறதா, கவனிக்காமல் உள்ளதா அல்லது பிறந்த குட்டியை கடித்து துன்புறுத்துகிறதா என கண்காணித்து, அந்த குட்டியை நாங்கள் கைப்பற்றி, காப்பாற்றி வருகிறோம்.

பச்சிளம் குட்டிகள் பராமரிப்பு பிரிவில், முதல் முதலாக, குட்டிகளை பாதுகாக்க, 'பீடல் வார்மர்' என்ற, கருவி இருந்தது. அந்த கருவி, கதிர்வீச்சு ஒளி வாயிலாக, இளஞ்சூட்டில் குட்டிகளை வைத்து, பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.ரூ.50 லட்சம்அதன்பின், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 'நியோநாடல் இன்குபேட்டர்' எனப்படும், அதிநவீன, 'பச்சிளம் குட்டிகள் உறையுள்' வாங்கப்பட்டது. இதற்கென தனி கட்டடமும் கட்டப்பட்டது.

இந்த கருவியில், குட்டிகள் சுவாசிக்க ஆக்சிஜன் வசதியும், அவற்றின் இதயத் துடிப்பு, ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலையை கண்காணிக்க, பல்நோக்கு அளவீட்டுமானியும் உள்ளது. குட்டிகளை பரிசோதிக்க, ஸ்டெதஸ்கோப் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.இப்பிரிவில், காலை, இரவு என, இரண்டு, 'ஷிப்ட்'களில், டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், வேறு எந்த பணிகளுக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. வி.ஐ.பி.,க்களாக இருந்தாலும், வெளி நபர்கள் யாரும் இப்பிரிவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.குளிர் மற்றும் கோடைக் காலங்களுக்கேற்ப, கருவியில் பருவநிலை அளவுகளை மாற்றும் முறை உள்ளதால், மருந்து கலந்த காற்று, அவசர நிலைக்கேற்ப ஆக்சிஜன் அளித்து, விலங்குகளை பாதுகாக்கலாம்.

பாலுாட்டும்போது, குட்டிகளின் வாயில், சிறிய குழாய்கள் பொருத்தி, அதை, கதிரியக்கம் மற்றும் எடை அளவீட்டு முறைகளில் பரிசோதித்து, உணவு குழாயில், சரியாக பால் இறங்குகிறதா என, கண்டுபிடிக்கப்படுகிறது.புதிதாக கொண்டு வரப்படும் குட்டிகள், முதல் நாளில், குறைந்தது, 8 முதல் 12 மணிநேரம் வரை, புட்டிப்பால் குடிக்க, நேரம் எடுத்துக் கொள்ளும். அதன்பின், தானாகவே புட்டிப்பாலில் குடிக்க பழகும்.தடுப்பூசிவெள்ளாட்டுப்பால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூனை இன மாட்டுப்பால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பாலுாட்டுப்பட்டு, 45 முதல் 60 நாட்களுக்குள், முதல் தடுப்பூசியும், அடுத்தடுத்த, 21 முதல் 28 நாட்களுக்குள் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி முழுதுமாக கிடைத்த பின், உயிரியல் பூங்காவில் பிறந்த விலங்கு மற்றும் பறவை இனங்கள் மட்டும், காட்சிக்கு வைக்கப்படும்.

கடந்த, இரண்டரை ஆண்டுகளில், ஏழுக்கும் மேற்பட்ட விலங்குகளின் குட்டிகள் மற்றும் பறவை குஞ்சுகள், இப்பிரிவால் வளர்க்கப்பட்டுள்ளன. தற்போது, சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, காட்டு மாடுகள் ஆகியவை, இங்கிருந்து வளர்க்கப்பட்டு, நாடு முழுதும் உள்ள, பூங்காக்களுக்கு கொடுக்கப்படுகின்றன.பெரும்பாலும், இங்கு கொண்டு வந்த பின், வேட்டையாடுதல் உட்பட, தங்களின் இயல்பான பழக்க வழக்கங்களை விலங்குகள் மறந்துவிடும்.சரணாலயங்கள், காடுகளில் விடப்படும்போது, அவை மறந்த விஷயங்களுக்கு, மீண்டும் பழக்கப்படுத்தும் வகையிலான கட்டமைப்புகள்,

நம் நாட்டில் இல்லாததால், வண்டலுார் பூங்காவில் வைத்து, பாதுகாத்து வருகிறோம்.எதிர்காலத்தில் அதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால், விலங்குகளின் வாழ்விடங்கள் விரிவடைந்து, வனமும் வளரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X