வெள்ளி முதல் வியாழன் வரை (9.4.2021 - 15.4.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சந்திரன், குரு, புதன் அதிர்ஷ்டத்தை வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு நலம் அளிக்கும்
அசுவினி: உங்கள் அருமையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சிறு பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
பரணி: முயற்சிகள் தாமதமாகப் பலன் தரும். பெரியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிறரின் ஆசியைப் பெறுவீர்கள். வழக்கு சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். மேலதிகாரி மூலம் நன்மை அடைவீர்கள்.
கார்த்திகை 1: சகபணியாளர்களுக்கு ஆலோசனைகள் தந்து பாராட்டை பெறுவீர்கள். ஏங்கிக் காத்திருந்த வெற்றி கிட்டும். நெருங்கிய ஒருவருக்காக பிறரின் உதவியை நாடுவீர்கள். புது அதிகாரியிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.
ரிஷபம்
புதன், சுக்கிரன், சூரியனால் அபரிமித நன்மைகள் உண்டு. அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

கார்த்திகை 2,3,4: புதிய திட்டங்கள் மூலம் பாராட்டுப் பெறுவீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணங்கி வருவார்கள். பெண்கள் சேமிக்க தொடங்குவீர்கள். கலைஞர்கள் தங்களின் தொழிலில் ஈடுபாடு கொள்வர். செல்வாக்கு அதிகரிக்கும்.
ரோகிணி: பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைப்பீர்கள். அளிக்கப்பட்ட பொறுப்பை திறமையுடன் சிறப்பாக முடிப்பீர்கள். தாயாரால் நன்மை ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிருகசீரிடம் 1,2: மேலதிகாரிகள் அன்புடன் உதவுவர். திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்க போராடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தகுந்த ஆலோசனை கிடைப்பதால் வியாபார போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
மிதுனம்
ராகு, கேது, குரு நற்பலன்களை வழங்க உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான திருப்பம் உண்டு. எதிர்கால உயர்வுக்கான நல்ல வழிகாட்டி கிடைப்பார். நெருங்கியவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள்.
திருவாதிரை: எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். பணியில் பரபரப்பு கூடுதலாக இருக்கும். இரவில் பயணங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் 1,2,3: வீட்டில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பெண்களின் சிறு தேவைகள் நிறைவேறும். அலட்சியம் காரணமாக வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் அதிக கவனம் தேவை. தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
கடகம்
சந்திரன், குரு, புதன் யோகமான பலன்களை அளிப்பர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
புனர்பூசம் 4: உழைப்பால் நல்ல பலன்கள் கிட்டும். நவீனப் பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பொறுமையுடன் இருந்தால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
பூசம்: உங்களின் செல்வாக்கு கூடும். உறவினரின் பிரச்னைகளில் மத்யஸ்தம் செய்து சரி செய்வீர்கள். நண்பர்களின் உதவியால் மனவருத்தம் நீங்கும். எதிலும் தாமதங்கள் இருக்கும். மனநிம்மதி அதிகரிக்கும்.
ஆயில்யம்: பணியில் விரும்பிய துறை கிடைக்கும். கடுமையான உழைப்பு நல்ல பலன் தரும். நல்ல திருப்பத்தை காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறத் தடை ஏற்படலாம். செயல்பாடுகளில் வேகம் இருக்கும்.
சிம்மம்
குரு, சுக்கிரன், சனி நலம் அளிக்கும் நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
மகம்: அலுவலக வேலைகளை ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். குழப்பத்துடனும், மன உளைச்சலுடனும் இருந்த நிலை மாறும். எந்தச் செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
பூரம்: எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள். குடும்பத்தின் வருமானம் பெருகும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பயணத் திட்டத்தில் மாற்றம் உண்டு.
உத்திரம் 1: குடும்பத்தில் அமைதி நிலவும். மேலதிகாரியிடம் புதிய விஷயங்களைக் கற்பீர்கள். எதிர்பாராத ஒருவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறரின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும். முயற்சியால் நன்மை அடைவீர்கள்.
சந்திராஷ்டமம்: 9.4.2021 நள்ளிரவு 1:46 - 12.4.2021 காலை 11:57 மணி
கன்னி
புதன், கேது, சுக்கிரனால் நன்மைகள் உண்டு. குருவாயூரப்பன் வழிபாடு கஷ்டத்தை நீக்கும்.
உத்திரம் 2,3,4: பணிச்சுமை அதிகரிப்பதால் லேசான வெறுப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வாகனம் வாங்கும் போது எதிர்பார்த்ததை விட அதிகம் செலவாகும். பெண்கள் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
அஸ்தம்: இளைஞர்கள் அவசரப்படாமல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. எதிர்பாலினத்தினரின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். மிகவும் கவனமாக செயல்படாவிட்டால் போராட்டமான வாரமாக இருக்கும்.
சித்திரை 1,2: எதிலும் அலட்சியம் வேண்டாம். ஆரோக்யம் பற்றிய கவனம் தேவை. பதற்றமான செயல்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக விவகாரங்களில் நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 12.4.2021 காலை 11:58 - 14.4.2021 இரவு 11:35 மணி
துலாம்
குரு, சுக்கிரன், புதன் நற்பலன்களை அள்ளி வழங்கவுள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
சித்திரை 3,4: உயரதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்போது அதை நன்கு பயன்படுத்துங்கள். அக்கம் பக்கத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
சுவாதி: குடும்பத்தில் ஒருவருக்கு திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் பிரச்னையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
விசாகம் 1,2,3: கடந்த கால செய்கைக்கு இப்போது வருந்துவீர்கள். நல்ல விஷயத்திற்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றி சோர்வு உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 14.4.2021 இரவு 11:36 மணி - 15.4.2021 நாள் முழுவதும்
விருச்சிகம்
புதன், சந்திரன், சனி, சூரியன் அதிர்ஷ்டமான அமைப்பில் உள்ளனர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
விசாகம் 4: உங்களின் திட்டம் ஒன்று நிறைவேறும். சேமிப்பு சற்றே உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசியல் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மேலதிகாரியால் நன்மை உண்டாகும்.
அனுஷம்: சிறு சிறு நன்மைகளை பெறுவீர்கள். பணி செய்யும் முறையில் சிறு மாற்றம் செய்வீர்கள். கலையார்வம் வரும். எதிரிகளின் பலம் குறையும். வருமானம் அதிகரிக்கும். தேவையற்ற விரோதத்தைச் சமாளிக்க வேண்டிவரும்.
கேட்டை: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிறருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். ஆலோசனை கேட்பவருக்கு நல்ல யோசனைகள் சொல்லி வியப்பூட்டுவீர்கள். நல்லவர்களின் ஆசிகளை பெறுவீர்கள்.
தனுசு
ராகு, புதன், சுக்கிரன் சாதகமான அமைப்பில் உள்ளனர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
மூலம்: பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். இளைஞர்களுக்குப் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தாயின் அன்பு, ஆசி பெறுவீர்கள்.
பூராடம்: ஆடை, நகை வாங்கும் யோகம் கிட்டும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். சகோதரர்களுடன் ஒற்றுமை குறையும்படி நடந்துகொள்ள வேண்டாம். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.
உத்திராடம் 1: புது நட்பு மலரும். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் உங்கள் அனுசரிப்பினால் மாறும். சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். பிடிவாதத்தைக் கைவிடுவீர்கள்.
மகரம்
குரு, புதன், சுக்கிரன் யோகமான அமைப்பில் உள்ளனர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
உத்திராடம் 2,3,4: கேட்ட உதவிகள் கிடைக்கும். உயர்ந்த மனிதர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நிதித் தேவைகள் நிறைவடையும். உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அந்தஸ்து உயரும்.
திருவோணம்: பணியாளர்களுக்கு அனுபவசாலிகளின் ஆலோசனை கிடைக்கும். உங்களின் தேவைகள் நிறைவேறும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். கூடுதலாக உழைத்துப் பலன் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: நண்பர்கள் உதவியால் நிம்மதி மீளும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வீர்கள். சேமிப்பு பற்றிய மனஅழுத்தம் இந்த வாரம் இருக்கும்.
கும்பம்
சூரியன், புதன், சுக்கிரன் அதிர்ஷ்டமான நிலையில் உள்ளனர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
அவிட்டம் 3,4: உங்களின் சிறு தவறுகளை மேலதிகாரி மன்னிப்பார். விட்டதைப் பிடிக்கும் உத்வேகம் வரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படாதபடி கவனமாக இருப்பீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.
சதயம்: பலநாள் பிரச்னை ஒன்று தீரும். பெண்கள் வெளி மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்கு திடீர் நன்மை ஏற்படும். தந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சிக்கனமாகச் செயல்படுவது நல்லது. நீங்கள் மதிக்கும் நபர் மூலம் பாராட்டு கிடைத்து மகிழ்வீர்கள். வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அதிகரிக்கும். எதிலும் ஒருவித நிதானப்போக்கு இருக்கும்.
மீனம்
சந்திரன், செவ்வாய், ராகு அபரிமித நன்மைகளை அளிப்பர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
பூரட்டாதி 4: உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படாதபடி கவனமாயிருங்கள். நட்புணர்வுடன் பிறரை அனுசரித்து செல்வீர்கள். புகழ் பெறுவீர்கள். வீட்டுக்குப் புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்திரட்டாதி: அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சமீபத்தில் மனதில் ஏற்பட்ட குழப்பம் அகலும். வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.
ரேவதி: சமீபத்தில் உடல்நலனில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ஒத்திப்போட்ட பயணங்களைத் தொடர்வது பற்றி யோசிப்பீர்கள். செலவுகளும் வருமானமும் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE