பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா: பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஈரோடு: சின்ன மாரியம்மன் கோவிலில், தீ மிதி விழாவில், பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. நடப்பாண்டு விழா, கொரோனாவால் எளிமையான முறையில், கடந்த, ?ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, மூன்று கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் சின்ன மாரியம்மன் கோவிலில்,

ஈரோடு: சின்ன மாரியம்மன் கோவிலில், தீ மிதி விழாவில், பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. நடப்பாண்டு விழா, கொரோனாவால் எளிமையான முறையில், கடந்த, ?ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, மூன்று கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் சின்ன மாரியம்மன் கோவிலில், நேற்று காலை குண்டம் நிகழ்வு நடந்தது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பர். கொரோனா தொற்றால், தலைமை பூசாரி, எட்டு பூசாரிகள் என, ஒன்பது பேர் மட்டும் தீ மிதித்தனர். பின்னர் நடு மாரியம்மன் கோவிலில், நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகளை தேர் சுற்றி வந்தது. இதையடுத்து பொங்கல் வைபவம் நடந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு சானிடைசர் தரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X