மொடக்குறிச்சி: குலவிளக்கம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, குலவிளக்கம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடப்பாண்டு தேர்திருவிழா கடந்த, 31ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கம்பம் நடுதல், பூச்சொரிதல், கிராம சாந்தி, கொடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை கோவிலில் பொங்கல் வைபவம் நடந்தது. வளாகத்தில் திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் தேர் நிலை சேர்ந்தது. இன்று சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, சத்தாபரணம், தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை அம்மன் குடி புகுதலுடன், விழா நிறைவடைகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE