பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்டிங் மைய வளாகத்தில் மது, குளிர்பானங்களுக்கு அனுமதி இல்லை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஈரோடு: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அறைகளை பார்வையிட வேட்பாளர், முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த ஆய்வுக்கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது.இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நிறைவடைந்து, கோபி, பவானிசாகர் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோபி கலை மற்றும் அறிவியல்

ஈரோடு: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அறைகளை பார்வையிட வேட்பாளர், முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த ஆய்வுக்கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது.


இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நிறைவடைந்து, கோபி, பவானிசாகர் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மற்ற ஆறு தொகுதிக்கான இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி., பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையிட, தேர்தல் ஆணையம் வழிமுறை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரே அனுமதி சீட்டில் மூன்று நபர்களுக்கு புகைப்பட அட்டையுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். இதன் மூலம், ஒரு நேரம் ஒரு நபர் மட்டும் அனுமதிக்கப்படுவர். வாகன நிறுத்தத்தில் மட்டும், வாகனங்களை நிறுத்த வேண்டும். தீப்பெட்டி, புகையிலை பொருட்கள், லைட்டர், பான் பராக், குட்கா மசாலா, ஹான்ஸ் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. மீறி வைத்திருந்தால், அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மது வகை, இதர குளிர்பானங்களுக்கு அனுமதி இல்லை. முகவர்கள் தங்கள் குடிலில் மட்டும் இருக்க வேண்டும். 'சிசிடிவியில்' ஏதேனும் பிரச்னை இருந்தால், அருகில் உள்ள வருவாய் துறை அலுவலர், போலீஸ் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். உணவுக்கு முகவர்களே பொறுப்பு. மூன்று பேருக்கு அனுமதி என்றாலும், ஒரு நேரம் ஒருவருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். சுழற்சி முறையில் மற்றவர் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில் எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., முருகேசன், மாநகரட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X