அதிகரிக்கும் கொரோனா; படுக்கை வசதி தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா; படுக்கை வசதி தயார்

Added : ஏப் 09, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்வதால், தேவையான படுக்கை வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.கொரோனா தொற்று இரண்டாம் அலை, கடந்த மார்ச் முதல் தீவிரமாகியுள்ளது. மே, ஜூனில் உச்ச நிலையை அடைந்து, படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், ஐந்து முதல், 15க்குள் தினமும் பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்வதால், தேவையான படுக்கை வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.


கொரோனா தொற்று இரண்டாம் அலை, கடந்த மார்ச் முதல் தீவிரமாகியுள்ளது. மே, ஜூனில் உச்ச நிலையை அடைந்து, படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், ஐந்து முதல், 15க்குள் தினமும் பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலை மாறி, நேற்று முன்தினம், 60 பேர் பாதித்துள்ளனர். அதேநேரம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இறப்பு இல்லை என்பது ஆறுதலாகும். தற்போதைய நிலையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட மூன்று மடங்கு உயர்ந்தாலும், அதை சமாளிக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையங்களில், படுக்கை வசதிகளை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிப்பு பகுதி என்று, மாவட்ட அளவில் எங்கும் சீல் வைக்கவில்லை. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும். கொரோனா தொடர்பான அறிகுறி தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து, சிகிச்சையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X