புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை முன், பவானி ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பவானிசாகர் அணை முன், பவானி ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 2018 ஏப்.,7 முதல் பாலம் மூடப்பட்டது. மூன்றாண்டாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாலம் மூடப்பட்டுள்ளதால், புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், புதுபீர்கடவு, பட்ரமங்கலம் மற்றும் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், பல கி.மீ., தூரம் சுற்றி சென்று வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிய பாலம் கட்ட, எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணி தொடங்கப்பட்டது. மந்தமாக நடந்த நிலையில், தற்போது பணி பாதியில் நிற்கிறது. இதனால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 8 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE