பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று; எபினேசர் காலனி 'தடை' பகுதியாக அறிவிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சங்ககிரி: ஒரே குடும்பத்தில், 4 பேர் உள்பட, 6 பேருக்கு கொரோனா உறுதியானதால், எபினேசர் காலனி, 'தடை' செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.சங்ககிரி, எபினேசர் காலனியை சேர்ந்த, 57 வயதுடையவர், லாரி உரிமையாளர். இவர், சில நாளுக்கு முன், வெளி மாவட்டம் சென்று வந்தார். நேற்று முன்தினம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வடுகப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அமுதராணி தலைமையில்

சங்ககிரி: ஒரே குடும்பத்தில், 4 பேர் உள்பட, 6 பேருக்கு கொரோனா உறுதியானதால், எபினேசர் காலனி, 'தடை' செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சங்ககிரி, எபினேசர் காலனியை சேர்ந்த, 57 வயதுடையவர், லாரி உரிமையாளர். இவர், சில நாளுக்கு முன், வெளி மாவட்டம் சென்று வந்தார். நேற்று முன்தினம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வடுகப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அமுதராணி தலைமையில் குழுவினர், சளி மாதிரி எடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதில், கொரோனா உறுதியானது. தொடர்ந்து, அவரது, 74 வயது தந்தை, 60 வயது தாய், 30 வயது மகனுக்கு பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது தெரிந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த, 79 வயது மூதாட்டி, 38 வயது பெண்ணுக்கு, தொற்று கண்டறியப்பட்டது. இதனால், சங்ககிரி தாசில்தார் விஜி, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, மக்கள் வெளியே செல்லாதபடி தடுப்பு ஏற்படுத்தினர். இதுதவிர, டி.பி., சாலையை சேர்ந்த, 26 வயது இளைஞருக்கும் தொற்று உறுதியானது. இதனால், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் பணியாளர்கள், எபினேசர் காலனி, டி.பி., சாலை முழுதும் கிருமிநாசினி தெளித்து, கொரோனா தடுப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X